...

வெர்ட்டிக்கல் கியூரிங் ஓவன்கள்

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இன்-லைன் வெர்ட்டிக்கல் ஓவன்களின் உலகின் மிகப்பெரிய நிறுவப்பட்ட தளத்தைக் கொண்டிருப்பதால் ஹெல்லர் நிறுவனம் பல முன்னணி மின்னணுவியல் உற்பத்தியாளர்களின் விருப்பத் தேர்வாக உள்ளது. எபோக்ஸி கியூரிங் செயல்முறையின் இன்-லைன் வெர்ட்டிக்கல் தன்னியக்கம் உற்பத்தித்திறன், தரம், மற்றும் தரை ஆக்கிரமிப்பு இடக் குறைப்பு ஆகியவற்றில் உடனடியாக குறிப்பிடத்தக்க பலன்களை அளிக்கிறது.இன்-லைன் செயலாக்கம் பேட்ச் ஓவன்களில் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் தேவைப்படும் வீணான நேரம் மற்றும் உழைப்பை அகற்றுவதன் மூலமும், ஓவன் சூடாகும் வரை காத்திருக்க வேண்டிய தேவையைத் தவிர்ப்பதன் மூலமும் அதிகபட்ச உற்பத்தித்திறனை வழங்குகிறது. முழுயான மற்றும் பகுதியளவு தன்னியக்க விருப்பங்கள் கிடைக்கின்றன. இன்-லைன் தொடர் செயலாக்கம் பேட்ச் ஓவன்களின் கதவுகள் ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் திறக்கப்படும்போது ஏற்படும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களை அகற்றுகிறது. மேலும் வலுக்கட்டாயமான கன்வெக்‌ஷன் வெப்பமூட்டல் நிலையான, சீரான விவரங்களை வழங்குகிறது. மேம்படுத்தப்பட்ட செயல்முறை நிலைத்தன்மை என்பது மேம்படுத்தப்பட்ட தயாரிப்புத் தரம் ஆகும்.

வெர்ட்டிக்கல் கியூரிங் ஓவன் 755 K3 இல் எடுக்கப்பட்ட, விதிவிலக்கான வெப்பநிலை யூனிஃபார்மிட்டியுடன் கூடிய 30 நிமிட கியூரிங் சுழற்சி விவரம். வெர்ட்டிக்கல் வடிவமைப்பு, தரை ஆக்கிரமிப்பு இடத்தை உகந்ததாக்குகிறது. அனைத்து தொழிற்சாலைகளிலும், குறிப்பாக கிளீன் ரூம்களில்  தரைப்பகுதி ஒதுக்கீட்டுச் செலவுகள் உயரும்போது, ஒரு வெர்ட்டிக்கல் வடிவ ஓவனால் ஆறு அடி அளவுள்ள சிறிய தரைப் பகுதியில் பல மணி நேர கியூர் சுழற்சிகளை வழங்க முடியும்.

வெர்ட்டிக்கல் கியூரீங் ஓவன் – 755 K3 –யில் போர்டு நகர்வு