பிரிண்டட் சர்க்யூட் போர்டு ரீஃப்ளோ சோல்டரிங் ஓவன்கள். எங்கள் புதிய ரீஃப்ளோ ஓவன் மேம்பட்ட செயல்திறனையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது. அதன் குறைவான உயரம்முள்ள டாப் ஷெல், தொழில்துறை 4.0 இணக்கத்தன்மை மற்றும் புதுமையான ஃப்ளக்ஸ் மேலாண்மை ஆகியவற்றுடன் உயர்-செயல்திறன் பயன்பாடுகளுக்கான சிறந்த தீர்வாக அமைகிறது.

பல்வேறு அளவுகளில் கிடைக்கும் எங்கள் வேக்யூம் ரீஃப்ளோ ஓவன்கள் குறைந்தபட்ச வாய்டிங்குடன் சிறந்த பலன்களை வழங்குகின்றன. எங்கள் IR மூலம் சூடாக்கப்பட்ட வெற்றிட சேம்பர்கள் உகந்த சோல்டரிங் தரத்திற்கான துல்லியமான வெப்பநிலைக் கட்டுப்பாட்டை வழங்குகின்றன.

ஃபார்மிக் அமில வேப்பர் சோல்டரிங்கிற்காக ஹெல்லர் நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ள ஹாரிசான்டல் ஃப்ளக்ஸ் ஃப்ரீ ஃபார்மிக் ரீஃப்ளோ ஓவன் தயார்நிலையில் உள்ளது. இந்தப் புதிய ஓவன் செமி S2/S8 பாதுகாப்புத் தரநிலைகளை (நச்சு வாயுக்கள் உட்பட) நிறைவு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழுமையான கன்வெக்ஷன் மற்றும் திறம்வாய்ந்த நைட்ரஜன் பயன்பாடு உள்ளிட்ட SMT சாலிடர் ரீஃப்ளோ துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு நாங்கள் எப்படி முன்னோடியாக இருந்தோமோ அதுபோல பல்வேறு அழுத்தங்களில் கியூரிங் செய்யும் தேவைகளை நிறைவுசெய்யும் தனிப்பயனாக்கப்பட்ட அழுத்தம் மூலம் கியூரிங் செய்யும் மற்றும் ரீஃப்ளோ ஓவன்களின் வகையை முதன்முதலில் இப்போதும் நாங்களே வழங்குகிறோம்..

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இன்-லைன் வெர்ட்டிக்கல் ஓவன்களின் உலகிலேயே மிகப்பெரிய நிறுவப்பட்ட தளத்தைக் கொண்டிருக்கும் ஹெல்லர் பல முன்னணி மின்னணு உற்பத்தியாளர்களின் விருப்பமான தேர்வாகும். எபோக்சி கியூர் செயல்முறையின் இன்-லைன், வெர்ட்டிக்கல் தன்னியக்கம் உற்பத்தித்திறன், தரம் மற்றும் தளப்பரப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் உடனடியான குறிப்பிடத்தக்க நன்மைகளை உருவாக்குகிறது.



