உயர்-செயல்திறன் பயன்பாடுகளுக்கான புதிய கன்வெக்ஷன் ரீஃப்ளோ ஓவன்கள்

புதிய MK7 கன்வெக்ஷன் ரீஃப்ளோ ஓவன்கள பல புத்தம்புதிய வடிவமைப்புகளுடன் தொழில்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. குறைந்த டெல்டா T, குறைக்கப்பட்ட நைட்ரஜன் நுகர்வு மற்றும் நீட்டிக்கப்பட்ட PM ஆகியவற்றிற்கான வாடிக்கையாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் இது நிறைவுசெய்கிறது. இவை அனைத்தும் ஒரு புதிய குறைந்த உயரமுள்ள பேக்கேஜில் இணைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தித் தளம் முழுவதையும் எளிதாகப் பார்க்க முடிகிறது.
உங்கள் தயாரிப்பிற்கு MK7 ரீஃப்ளோ ஓவனின் சிறப்பான நன்மைகளை நீங்களே காண்பதற்காக அதன் செயல்பாட்டு விவரங்களை இயக்கித் தரவுகளைச் சேகரிக்க எங்களுடைய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றிற்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்! அல்லது நீங்கள் விரும்பினால் உங்களுடைய மிகவும் சவாலான PCB-ஐ எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்களே ரீஃப்ளோ சோல்டரிங் செயல்பாட்டு விவரங்களை இயக்கித் தரவை உங்களுக்காக உருவாக்குவோம். உங்களுடைய தேவைகளுக்கேற்ப உங்கள் ரீஃப்ளோ ஓவன்களைத் தனிப்பயனாக்குவதற்காக உங்களுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்ற விரும்புகிறோம்.
- மிக அதிக பலன்
- போர்டில் மிகக் குறைந்த டெல்டா T
- மிகக் குறைந்த நைட்ரஜன் & மின்சாரப் பயன்பாட
- பராமரிப்பு இலவசம்!
- வேக்யூம் விருப்பத்தேர்வுடன் வாய்டு இல்லாதது
- தொழில்துறை 4.0 இணக்க ரீஃப்ளோ ஓவன்
- கட்டணம் இல்லாமல் ஒருங்கிணைக்கப்பட்ட Cpk மென்பொருள்
கன்வெக்ஷன் ரீஃப்ளோ ஓவன் w/புதிய குறைந்த உயர டாப் ஷெல்
ஆபரேட்டர்களுக்கு மிகவும் எளிதான அணுகலை புதிய குறைந்த உயரமுள்ள டாப்வ்ஷெல் ரீஃப்ளோ ஓவன் வழங்குகிறது. அனைத்து ஸ்கின்களிலும் இரட்டை இன்சுலேஷன் உள்ளது. இது ரீஃப்ளோ சோல்டரிங் ஆற்றல் இழப்பில் 10-15% வரை சேமிக்கிறது
தொழில்துறை 4.0 இணக்க கன்வெக்ன் ரீஃப்ளோ ஓவன்
இன்டர்நெட் ஆஃப் மேனுஃபேக்சரிங் (IoM) – சைபர்-பிசிக்கல் அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் ஸ்மார்ட் தொழிற்சாலைகள், புத்திசாலித்தனமான இயந்திரங்கள் மற்றும் நெட்வொர்க் செயல்முறைகள்.
மேம்படுத்தப்பட்ட குறைந்த உயரமுள்ள ஹீட்டர் மாட்யூல் சிறந்த காற்றோட்டம் மற்றும் சீரான தன்மையுடன் குறைந்த டெல்டா Ts ஐ வழங்குகிறது! சீரான எரிவாயு மேலாண்மை அமைப்பு “நெட் ஃப்ளோவை” நீக்குகிறது. இதன் விளைவாக நைட்ரஜன் நுகர்வு 40% வரை குறைகிறது! புதிய அரை வட்ட ஹீட்டர் நீண்ட ஆயுளுடன் மிகவும் வலிமையானது மற்றும் திறன் கொண்டது.
புரட்சிகரமான ஃப்ளக்ஸ் மேலாண்மை அமைப்பு
எங்களது ரீஃப்ளோ ஓவனில் புரட்சிகரமான ஃப்ளக்ஸ் சேகரிக்கும் அமைப்பு உள்ளது. இது ரீஃப்ளோ சோல்டரிங் ஓவன் இயங்கும் போது எளிதாக அகற்றி மாற்றக்கூடிய சேகரிப்பு ஜாடிகளில் ஃப்ளக்ஸை சிக்க வைக்கிறது. இதன் மூலம் தடுப்புப் பராமரிப்பு (P.M) முயற்சி மிச்சப்படுகிறது. புதிய ஃப்ளக்ஸ் வடிகட்டுதல் பெட்டியில் நீண்ட கால P.M இடைவெளியில் ஃப்ளக்ஸ் அடைப்பு ஏற்படும் அபாயமும் இல்லை.

கூடுதலாக, எங்கள் தனியுரிம ஃப்ளக்ஸ்-ஃப்ரீ கிரில் அமைப்பு கூலிங் கிரில்களில் உள்ள ஃப்ளக்ஸ் எச்சத்தை கட்டுப்படுத்துகிறது. ஹெல்லர் ரீஃப்ளோ ஓவன் அமைப்பு எந்த ஓவனிலும் இல்லாத அளவுக்கு அதிக பலனை அளிக்கிறது!
புதிய கிரீன் ஃப்ளெக்ஸ் மேலாண்மைத் தீர்வு – குறைந்த வெப்பநிலை வினையூக்கி
புதிய குறைந்த வெப்பநிலை வினையூக்கி அமைப்பு ஹீட்டர் மாட்யூல்களுக்குள் ஓர் ஒருங்கிணைந்த வினையூக்கியைப் பயன்படுத்தி பாதிப்பில்லாத CO2 மற்றும் H2O ஆக சிதைவடைகிறது. அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் வெளியேற்றம் அல்லது கழிவு துணைப் பொருட்களை உருவாக்காது. மற்ற ஃப்ளக்ஸ் அகற்றும் தொழில்நுட்பங்களைப் போலல்லாமல் வினையூக்கிக்குக் கூடுதல் ஆற்றல் அல்லது குளிரூட்டல் தேவையில்லை. இது இயக்க செலவுகளை மிச்சப்படுத்துகிறது. ஓவனில்ஆக்ஸிஜனைக் குறைத்து வினையூக்கி கூடுதல் நன்மையைஅளிக்கிறது. இலக்கில் இருக்கும் PPM அளவை எட்ட நைட்ரஜன் பயன்பாட்டைக் குறைக்கிறது. ஓவனில் ஃப்ளக்ஸ் எச்சங்களை வினையூக்கி சுத்தமாக வைக்கிறது. PM இடைவெளிகளை நீட்டிக்கிறது மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது. ரீஃப்ளோ ஓவன் ஃப்ளக்ஸ் அகற்றுதல் பற்றி மேலும் அறியவும்.
கன்வெக்ஷன் ரீஃப்ளோ ஓவன் CPK

நாங்கள் ஒரு டைனமிக் 3 அடுக்கு அமைப்பை (அடுக்கு 1: ரீஃப்ளோ ஓவன் CPK, அடுக்கு 2 செயல்முறை CPK, அடுக்கு 3 தயாரிப்பு கண்காணிப்பு) வழங்குகிறோம். இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் அதே வேளையில் தயாரிப்புத் தரம் மற்றும் பலனை விரைவாக மேம்படுத்த உதவுகிறது. மேலும் தானாகவே பதிவைப் பராமரித்தலும் நினைவூட்டுதலும் ஆகிய கூடுதல் நன்மைகள் அனைத்து ரீஃப்ளோ சோல்டரிங் செயல்முறை அளவுருக்கள் கட்டுப்பாட்டிலும் விவரங்களுக்குள்ளும் இருக்கின்றன என்பது வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியை வழங்குகிறது.
நிரல்படுத்தக் கூடிய குளிரூட்டல் கன்வெக்ஷன் ரீஃப்ளோ ஓவன்

ரீஃப்ளோ ஓவன் ஆற்றல் மேலாண்மை மென்பொருள்


