முழுமையான் கன்வெக்ஷன் மற்றும் திறமையான நைட்ரஜன் பயன்பாடு உட்பட SMT சோல்டர் ரீஃப்ளோ துறைகளில் முன்னேற்றங்களை நாங்கள் எவ்வாறு முன்னெடுத்துச் சென்றோமோ அதேபோலவே பல்வேறு அழுத்தங்களில் செய்யப்படும் கியூரிங் தேவைகளை நிறைவு செய்வதற்காகத் தனிப்பயனாக்கப்பட்ட அழுத்தம் மூலம் கியூரிங் செய்யப்படும் மற்றும் ரீஃப்ளோ ஓவன்களின் தொகுப்பை முதன்முதலில் நாங்கள் தான் வழங்குகிறோம். R&D மற்றும் அதிக எண்ணிக்கையிலான உற்பத்திப் பயன்பாடுகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்றவாறு, பல்வேறு சேம்பர் அளவுகளுடன் கூடிய பலவிதமான அழுத்தம் மூலம் கியூரிங் செய்யும் ஓவன்களை ஹெல்லர் வழங்குகிறது. பலவிதமான கிளீன் ரூம் மற்றும் தன்னியக்க விருப்பத்தேர்வுகள் கிடைக்கின்றன
கன்வெக்ஷன் ஹீட்டிங் பிரஷர் கியூரிங் ஓவன்கள்
சேம்பருக்குள் நிலையான அழுத்தத்தைப் பராமரிக்கும் அதே வேளையில் கன்வெக்ஷன் ஹீட்டர் மாட்யூலில் காற்று (அல்லது நைட்ரஜன்) சூடாக்கப்படுகிறது. சூடான காற்று அதிக நம்பகத்தன்மை கொண்ட விசிறி மோட்டார் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அழுத்தச் சேம்பர் முழுவதும் தொடர்ந்து சுற்றிவந்து தயாரிப்பு மீது நிலையான வெப்பத்தை அளிக்கிறது.

வேக்யூம் மாட்யூல் விருப்பத்தேர்வு
வெற்றிடத்தை மேம்பட்ட வகையில் நீக்குவதற்காக விருப்பத்தேர்வாக வேக்யூம் பம்பைச் சேர்க்கலாம். கியூரிங் சுழற்சியின் தொடக்கத்தில் பெரிய அளவிலான வெற்றிடங்களை அகற்ற ஒரு வேக்யூம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சிறிய அளவிலான வெற்றிடங்கள் பின்னர் அழுத்தத்தின் மூலம் அகற்றப்படுகின்றன. வெற்றிடம் மற்றும் அழுத்தம் இரண்டையும் பயன்படுத்தி ஒட்டுமொத்த சுழற்சி நேரத்தைக் குறைக்கலாம்.


