ஃபார்மிக் ஆசிட் வேப்பர் சோல்டரிங்கிற்காக ஹெல்லரால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹாரிசான்டல் ஃப்ளக்ஸ்-ஃப்ரீ ஃபார்மிக் ரீஃப்ளோ ஓவன் தயார்நிலையில் உள்ளது. இந்தப் புதிய ஓவன் செமி S2/S8 பாதுகாப்புத் தரநிலைகளை (நச்சு வாயுக்கள் உட்பட) நிறைவு செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்களது ஃபார்மிக் ரீஃப்ளோ செயல்முறை. இந்த ஃபார்மிக் ரீஃப்ளோ ஓவன்கள் முக்கிய தெர்மல் ஸொன்களில் (பொதுவாக ஸோக் ஸோன்கள்) ஃபார்மிக் அமில நீராவியைச் செலுத்துவதன் மூலம் ஒரு சாதாரண ரீஃப்ளோ ஓவனைப் போலவே செயல்படுகின்றன. இங்கே ஃபார்மிக் அமிலம் ரீஃப்ளோவுக்கு முன் உலோகத்தில் உள்ள எந்த ஒரு ஆக்சைடையும் நீக்குகிறது. ஃபார்மிக்கின் அளவுகள் ஒரு பப்ளர் அமைப்பால் பராமரிக்கப்படுகின்றன மற்றும் நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படுகின்றன.

ஃபார்மிக் ஆசிட் பிரிசிஷன் பப்ளர் கேபினெட். எங்களது ஃபார்மிக் ஆசிட் ரீஃப்ளோ ஓவன்கள் செயல்முறை அறையில் நிலையான மற்றும் சீரான ஃபார்மிக் செறிவுகளை வழங்க ஒரு பப்ளர் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
- நிலையான, நம்பகமான ஃபார்மிக் அமில நீராவிச் செறிவை 0.5% க்குள் வழங்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இது ஒரு நிலையான செயல்முறையை உறுதி செய்கிறது
- அன்டோயின் சமன்பாட்டின் படி கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலைக்கு ஃபார்மிக் அமில நீராவிச் செறிவு நைட்ரஜனை நிறைவுநிலை அடையச் செய்கிறது. ஓவனில் உள்ள ஃபார்மிக் அமில நீராவிச் செறிவைக் பப்ளர் வெப்பநிலை மற்றும் பப்ளர் வழியாக செல்லும் நைட்ரஜன் மூலம் மாற்றலாம்
- பப்ளர் ஒருபோதும் குறைந்தபட்ச அளவை விடக் குறையாமல் இருப்பதைத் தன்னியக்க நிரப்பும் அமைப்பு உறுதி செய்கிறது

Bubbler Cabinet
ஹெல்லர் ஃபார்மிக் கேட். செயல்முறை வாயு நுகர்வை சிறந்தமுறையில் குறைக்க உதவும் ஃபார்மிக் கேட் அமைப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஃபார்மிக் கேட் ஓவனின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் இடங்களில் வைக்கப்படும் இரட்டை கதவுகளின் தொகுப்பாகச் செயல்படுகிறது. உற்பத்தியின் போது ஒரு தயாரிப்பு இயந்திரத்திற்குள் நுழையும் அல்லது வெளியேறும் நேரத்தில் ஒரு கதவு மட்டுமே திறக்கும். இது செயல்முறை அறையை வெளியில் இருந்து தனிமைப்படுத்தி, நைட்ரஜன் மற்றும் ஃபார்மிக் அமில நுகர்வைக் குறைக்கிறது.


